சாத்தூர் அருகே பட்டாசு தொழிற்சாலை விபத்து: உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 15 ஆக உயர்வு

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை ஒன்றில் இன்று பிற்பகல் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்து உள்ளது.
சாத்தூர் அருகே பட்டாசு தொழிற்சாலை விபத்து: உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 15 ஆக உயர்வு
Published on

புதுடெல்லி,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம்பண்ணையைச் சேர்ந்த சந்தனமாரி என்பவருக்கு செந்தமான பட்டாசு தொழிற்சாலை அச்சங்குளத்தில் உள்ளது.நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிப்பெருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதிபெற்று இயங்கும் இந்த ஆலையில் 35க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், இன்று வழக்கம்போல் ஆலையில் பட்டாசு உற்பத்தி மேற்கெள்ளப்பட்டது. அப்போது, ஒரு அறையில் பட்டாசுகளுக்கு மருந்து செலுத்தும்போது உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. அந்த அறையில் ஏற்பட்ட தீ அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவியது. இதனால் அடுத்தடுத்து உள்ள 6 அறைகளிலும் பட்டாசுகள் வெடித்துச் சிதறி விபத்து ஏற்பட்டது.

இதில், ஏழையிரம்பண்ணையைச் சேர்ந்த மாரியம்மாள் என்ற பெண் உள்பட 11 தெழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் 34 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.அங்கு சிகிச்சை பலனின்றி 4 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணைக்கை 15 ஆக உயர்ந்து உள்ளது.

வெடிவிபத்து தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் உள்பட 3பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் - , காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

பிரதமர் மோடி வெடி விபத்ததில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்து உள்ளார். மிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com