சிங்கப்பெண் அதிரடிப்படை மூலம் சென்னையில் முதல் வழக்கு பதிவு

அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பெண் அதிரடிப்படை மூலம் சென்னையில் முதல் வழக்கு பதிவு
Published on

சென்னை,

சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழகத்தில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை உருவாக்கப்படும் தேர்தல் பிரசாரத்தின்போது முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்து இருந்தார். அதன்படி, கடந்த 9-ந்தேதி சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். 10-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் இந்த படைப்பிரிவு செயல்பாட்டுக்கு வந்தது.

வழக்குப்பதிவு

இந்த நிலையில், சென்னையில் சிங்கப்பெண் அதிரடிப்படை (Singappen Athiradi Padai) மூலம் சென்னையில் முதல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை அயனாவரத்தில் வீட்டில் இருந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து சுரேஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com