செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வென்ற குகேஷுக்கு முதல் அமைச்சர் வாழ்த்து

கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார்.
செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வென்ற குகேஷுக்கு முதல் அமைச்சர் வாழ்த்து
Published on

சென்னை,

'பிடே' கேண்டிடேட்ஸ் சர்வதேச செஸ் தொடர் கனடாவின் டொரோன்டோ நகரில் நடந்தது. இதில் இன்று கடைசி சுற்றான 14வது சுற்று ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தை இந்திய வீரர் குகேஷ் டிரா செய்ததன் மூலம் 9 புள்ளிகளை பெற்றார். அத்துடன், முதல் இடத்தை தக்கவைத்துக்கொண்ட குகேஷ், சாம்பியன் பட்டத்தை வென்றார்.

கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில், குகேஷுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;

"17 வயதில் கேண்டிடேட்ஸ் தொடரை வென்று வரலாறு படைத்த குகேஷுக்கு வாழ்த்துகள். உலக செஸ் சாம்பியன் தொடரில் டிங் லிரனுக்கு எதிரான போட்டியில் வெல்ல வாழ்த்துகள்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com