பாரத் பயோடெக் நிறுவனத்துடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தமிழகத்தில் தடுப்பூசி உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள் குறித்து பாரத் பயோடெக் நிறுவனத்துடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
பாரத் பயோடெக் நிறுவனத்துடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
Published on

சென்னை,

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்திலேயே தடுப்பூசி உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், கோவாக்சின் தடுப்பூசியை தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவன அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் நடத்தினார். தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் தடுப்பூசி உற்பத்திக்கான கட்டமைப்பு, மூலப்பொருட்கள், நிதி ஒதுக்கீடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில், அரசு அதிகாரிகள், பாரத் பயோடெக் நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் தடுப்பூசி தயாரிக்கும் டெண்டருக்கு அரசு உலகளவில் அழைப்பு விடுத்துள்ளது. இந்த டெண்டருக்கான கடைசி தேதி ஜூன் 5-ந்தேதி என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com