ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம்- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்

மொட்டை போடும் தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.
ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம்- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்
Published on

சென்னை,

மொட்டைக்கு இல்லை கட்டணம் என்ற திட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில் மொட்டை போடும் தொழிலாளர்களுக்கு உதவித்தொகை வழங்க கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து, திருக்கோயில்களில் மொட்டை போடும் தொழிலில் ஈடுபட்டு வரும் 1749 தொழிலாளர்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும் என சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்.

அதன்படி இந்த திட்டத்தை நாளை காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை வேப்பேரி ரித்தர்டன் சாலையில் உள்ள அனிதா பள்ளி வளாகத்தில் தொடங்கி வைக்கிறார்.

இந்த திட்டத்தை தொடங்குவதற்கு அடையாளமாக 250 பேருக்கு மாத ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. கொரோனா பரிசோதனை மேற்கொண்டு நெகட்டிவ் சான்றிதழ் உடன் மட்டுமே பங்கேற்க வேண்டும் எனவும், கோயில் பணியாளர்களுக்கு வழங்கப்பட உள்ள ஊக்கத்தொகை அந்தந்த கோயில் நிர்வாகம் சார்பில் எடுத்து வந்து பொறுப்பாளரிடம் ரொக்கமாக வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

பயனாளிகள் ஆதார் அட்டையுடன் வர வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான பொறுப்பு அலுவலர்களாக இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, உதவி ஆணையர்ஜோதி லட்சுமி, செயல் அலுவலர்கள் சீதாராமன் ஜெயராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com