தமிழகத்தில் முதற்கட்டமாக 5 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டம்

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி ஒத்திகையை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டார்.
தமிழகத்தில் முதற்கட்டமாக 5 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டம்
Published on

சென்னை,

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி ஒத்திகையை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ரதாகிருஷ்ணன் கூறியதவது: ஒரு நாளைக்கு 100 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது.

தடுப்பூசி போடப்பட்டதற்கான குறுஞ்செய்தி செல்போன்களுக்கு அனுப்பிவைக்கப்படும். தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பும் நபர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். தடுப்பூசி போடப்பட்டவர்கள் உடலில் ஏதேனும் மாற்றங்கள் நிகழ்கின்றனவா என்பது குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

முன்கள பணியாளர்களுக்கு பாரபட்சமின்றி தடுப்பூசி வழங்கப்படும். பிற மாவட்டங்களிலும் தடுப்பூசி ஒத்திகை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் முதற்கட்டமாக 5 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com