

தமிழ்நாட்டில் இன்று வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர்கள் பட்டியலின்படி, மொத்தம் 5 கோடியே 67 லட்சத்து 7 ஆயிரத்து 380 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 18-19 வயதுக்கு உள்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 12 லட்சத்து 51 ஆயிரம். மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 63 ஆயிரம். 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வாக்காளர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 99 ஆயிரம் ஆகும்.
அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 5 லட்சத்து 36 ஆயிரத்து 991 வாக்காளர்கள் உள்ளனர். 2-வது இடத்தில் ஆவடி தொகுதி உள்ளது. ஆவடி தொகுதியில் 4 லட்சத்து 28 ஆயிரத்து 772 வாக்காளர்கள் இருக்கின்றனர். தமிழ்நாட்டிலேயே குறைந்த அளவு வாக்காளர்களை கொண்ட தொகுதியாக சென்னையில் உள்ள துறைமுகம் தொகுதி உள்ளது.
இங்கு 1 லட்சத்து 16 ஆயிரத்து 896 வாக்காளர்கள் உள்ளனர். அதற்கு முந்தைய இடத்தில், அதாவது கடைசிக்கு முந்தைய இடத்தில் எழும்பூர் தொகுதி இடம்பெற்றுள்ளது. இந்தத் தொகுதியில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 879 வாக்காளர்கள் உள்ளனர்.