அரசு கலைக்கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை

கரூர், குளித்தலை அரசு கலைக்கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடந்தது.
அரசு கலைக்கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை
Published on

கலந்தாய்வு

கரூர் அரசு கலைக் கல்லூரியில் 2022-23-ம் கல்வி ஆண்டில் இளங்கலை மற்றும் இளம் அறிவியல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான கலந்தாய்வு 8 ம் தேதி தாடங்கியது. சிறப்பு ஒதுக்கீட்டின் அடிப்படையில் அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் (முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள்,தேசிய மாணவர் படை, விளையாட்டு பிரிவு மாணவ , மாணவிகள் மற்றும் அந்தமான் நிக்கோபார் மாணவர்கள் ஆகியோருக்கான) கலந்தாய்வு நடைபெற்றது. இதில் மொத்தம் 114 இடங்களுக்கு மொத்தம் 814 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், 47 பேருக்கு சேர்க்கைக்கான ஆணை வழங்கப்பட்டன.

தமிழ்-ஆங்கில பாடப்பிரிவுக்கு சேர்க்கை

இதனையடுத்து இளம் தமிழ் மற்றும் ஆங்கில பாடப்பிரிவுகளுக்கான சேர்க்கை நடைபெற்றது. இதில் தமிழ் பாடப்பிரிவிற்கு 60 இடங்களுக்கு 1,869 பேரும், ஆங்கில பாடப்பிரிவிற்கு 60 இடங்களுக்கு 1043 பேரும் விண்ணப்பித்திருந்தனர். இதில் கல்லூரி முதல்வர் கவுசல்யா தேவி, தமிழ் மற்றும் ஆங்கிலத்துறை பேராசிரியர்கள் கலந்து கொண்டு மாணவர் சேர்க்கையை நடத்தினர். தமிழ், ஆங்கில பாடத்திற்கு நேற்று விறுவிறுப்பாக சேர்க்கை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியர்கள் செய்திருந்தனர்.தனையடுத்து  வணிகவியல், வணிககணினி, வணிக நிர்வாகவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும், 13-ந்தேதி இளங்கலை வரலாறு மற்றும் பொருளியல் பாடப்பிரிவுகளுக்கும், 16-ந்தேதி இளம் அறிவியல், விலங்கியல், தாவரவியல், இயற்பியல், வேதியல், புவியியல், புவிஅமைப்பியல், கணிதம், புள்ளியியல், கணினி அறிவியல், ஊட்டச்சத்து மற்றும் உணவு முறைகள் ஆகியபாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

குளித்தலை

குளித்தலை அருகே அய்யர்மலையில் உள்ள குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக்கல்லூரியில் (சட்டமன்ற பொன்விழா) 2022-23-ம் கல்வி ஆண்டிற்கான முதலாம் ஆண்டு இளங்கலை மற்றும் இளம் அறிவியல் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த 8-ந் தேதி தொடங்கியது. இதில் சிறப்பு ஒதுக்கீட்டு அடிப்படையில் அனைத்துப்பாடப்பிரிவினருக்கும் கலந்தாய்வு நடைபெற்றது. இதையடுத்து இளம் அறிவியல் பாடப் பிரிவுகளான கணிதம், கணினி அறிவியல், மின்னணுவியல், இயற்பியல், வேதியியல், உணவு மற்றும் ஊட்டச்சத்துவியல், தாவரவியல், விலங்கியல் மற்றும் கணினி பயன்பாட்டியல் ஆகிய பாடபிரிவுகளுக்கான மாணவ, மாணவிகள் கலந்தாய்வு நடைபெற்றது. அறிவியல் பாடப் பிரிவுகளில் உள்ள 335 இடங்களுக்கு ஆன்லைன் மூலம் 1,601 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இந்த கலந்தாய்வில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன், மாணவ சேர்க்கை குழுவினரான கணினி துறைத்தலைவர் அசோக்குமார், இயற்பியல் துறைத்தலைவர் ராமநாதன், பேராசிரியர் சக்திவேல் ஆகியோர் மாணவ, மாணவிகளின் மதிப்பெண் தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் தேர்வு செய்தனர். இதனைதொடர்ந்து வருகிற 12-ந் தேதி வணிகவியல், வணிக கணினி பயன்பாட்டியல் மற்றும் வணிக நிர்வாகவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும், 16-ந்தேதி இளங்கலை பாடப்பிரிவுகளான தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com