ஜேடர்பாளையத்தில் விவசாயிகளுக்கு மீன் வளர்ப்பு பயிற்சி

ஜேடர்பாளையத்தில் விவசாயிகளுக்கு மீன் வளர்ப்பு பயிற்சி
ஜேடர்பாளையத்தில் விவசாயிகளுக்கு மீன் வளர்ப்பு பயிற்சி
Published on

பரமத்திவேலூர்:

ஜேடர்பாளையத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் அட்மா திட்டம் சார்பில் ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு பயிற்சி நடைபெற்றது. மாவட்ட உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குனர் நாச்சிமுத்து பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார். கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி முன்னிலை வகித்தார். மேட்டூர் அரசு மீன் பண்ணை மேற்பார்வையாளர் ரவி கலந்து கொண்டு ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பில் உள்ள சாதகங்கள், பண்ணைக்குட்டைகளில் அவைகளை வளர்க்கும் தொழில்நுட்பங்கள், மீன்களின் சீரான உடல் எடை வளர்ச்சிக்கு மேற்கொள்ள வேண்டிய தீவன மேலாண்மை, மீன் வளர்ப்புக்கு அரசு அளிக்கும் மானிய உதவிகள் மற்றும் விற்பனை வழிமுறைகள் குறித்து விளக்கினார்.

மேலும் மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் உறுப்பினராகி நலவாரிய அட்டை பெற்று மீன் வளர்க்கும் விவசாயிகளின் குடும்பங்களுக்கு தமிழக அரசு அளிக்கும் கல்வி உதவித்தொகை, திருமண உதவி தொகை குறித்தும் விளக்கினார். பின்னர் சிறுநல்லிகோவில் கிராமத்தில் மீன் பண்ணை அமைத்து மீன் வளர்த்து வரும் விவசாயி ராஜூ மீன்கள் வளர்க்க பண்ணைக்குட்டை அமைப்பது, கட்லா, ரோகு. மிர்கால், சாதா கெண்டை, புல் கெண்டை மற்றும் மரபணு மேம்படுத்தப்பட்ட கிப்ட் திலேப்பியா ஆகிய பல்வேறு ரக மீன்களை ஒருங்கிணைத்த முறையில் வளர்க்கும் தொழில்நுட்பங்கள் குறித்து பேசினார். முடிவில் உதவி வேளாண்மை அலுவலர் ஸ்ரீதர் நன்றி கூறினார். ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் ஸ்ரீதர், அட்மா உதவி தொழில்நுட்ப மேலாளர் செல்வகண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com