புரட்டாசி மாதம் எதிரொலி:கடலூர் துறைமுகத்தில் மீன்கள் விலை சரிவு

புரட்டாசி மாதம் என்பதால், கடலூர் துறைமுகத்தில் மீன்களின் விலை நேற்று குறைந்து காணப்பட்டது.
புரட்டாசி மாதம் எதிரொலி:கடலூர் துறைமுகத்தில் மீன்கள் விலை சரிவு
Published on

கடலூர் முதுநகர், 

கடலூர் துறைமுகத்தில்இருந்து நாள்தோறும் சிங்காரத்தோப்பு, அக்கரை கோரி, சோனங்குப்பம், தேவனாம்பட்டினம், சொத்திகுப்பம், ராசாபேட்டை, சித்திரப்பேட்டை, தாழங்குடா, உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபர் படகுகளில் மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடித்து வருவது வழக்கம். கடலூர் துறைமுகம் மீன்பிடி தளத்தில் அதிகாலை 3 மணி முதலே மீன்களின் விற்பனை தொடங்கி விடும். குறிப்பாக விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இதன் காரணமாக மீன்களின் விலையும் உயர்ந்து காணப்படும்.

இந்நிலையில், தற்போது புரட்டாசி மாதம் என்பதால், அசைவ உணவை பலரும் தவிர்த்து வருகிறார்கள். இதனால் ஞாயிற்றுக்கிழமையான நேற்று வழக்கத்தை விட மீன்கள் வாங்குவதற்கு குறைந்த அளவில் தான் மக்கள் வந்திருந்தனர்.

விலை குறைந்தது

இதனால் மீன்களின் விலையும் சற்று குறைந்து காணப்பட்டது. கிலோ ரூ.400 முதல் ரூ.500 வரை விற்பனை செய்யப்படும் பன்னி சாத்தான் வகை மீன் ரூ.250-க்கு விற்பனை செய்யப்பட்டது.

அதேபேனர்று 300 ரூபாய் முதல் 350 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் கனவா வகை மீன் ரூ.150 -க்கும், ரூ.800 வரை விற்பனை செய்யப்படும் வஞ்சிரம் மீன் ரூ.600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

புரட்டாசி மாதம் என்பதால், மீன்வாங்க வரும் பொதுமக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. எனவே மீன்களின் விலையும் குறைந்து காணப்பட்டதாக மீனவர் ஒருவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com