விசைப்படகுகளை மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு

விசைப்படகுகளை மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
விசைப்படகுகளை மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு
Published on

கோட்டைப்பட்டினம்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விசைப்படகுகளை மீன்பிடி தடை காலத்தில் மீன்வளத் துறையினர் ஆய்வு செய்வார்கள். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக ஆய்வு மேற்கொள்ளவில்லை. இதையடுத்து தற்போது கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியிலுள்ள விசைப்படகுகளை மீன்வளத்துறை துணை இயக்குனர் (விரிவாக்கம்) ரவிச்சந்திரன், தேனி மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் பஞ்ச ராஜா, புதுக்கோட்டை மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் சின்ன குப்பன், மீன்வளத்துறை ஆய்வாளர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து மீன்வளத்துறை உதவி இயக்குனர் சின்ன குப்பன் கூறுகையில், ஆண்டுக்கு ஆண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆய்வின்போது விசைப்படகுகள் எவ்வித பழுதும் இன்றி மீன்பிடிக்க தகுதியாக உள்ளதா மற்றும் விசைப்படகுக்கு உரிமம் உள்ளதா உள்ளிட்டவைகளை ஆராய்ந்து வருகிறோம். விசைப்படகுகளுக்கு உரிமம் இல்லாவிட்டால் உடனே அலுவலகத்தில் நேராக வந்து தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து உரிமத்தை பெற்றுக்கொள்ளலாம். இந்த ஆய்வின் போது விசைப்படகுகளுக்கு அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு அரசு வழங்கும் மானியம் டீசல் மற்றும் சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படும். சில நபர்கள் படகு இல்லாமல் உரிமம் மட்டும் வைத்துக்கொண்டு அரசு சலுகைகளை பெற்று வருகின்றனர். அவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com