காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: பரிசல்களுக்கு தடையால் மீனவர்கள் பாதிப்பு

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: பரிசல்களுக்கு தடையால் மீனவர்கள் பாதிப்பு
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: பரிசல்களுக்கு தடையால் மீனவர்கள் பாதிப்பு
Published on

பரமத்திவேலூர்:

மேட்டூர் அணை நிரம்பியதால் அணைக்கு வரும் நீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு செல்கிறது. இதனால் நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆற்றில் இறங்கவும், குளிக்கவும், பரிசல் செல்லவும் தடை விதித்துள்ளது. இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் அரசம்பாளையம், ஜேடர்பாளையம், கண்டிபாளையம், அய்யம்பாளையம் மற்றும் பிலிக்கல்பாளையம் பரிசல் துறைகளில் இருந்து எதிர் கரையான ஈரோடு மாவட்டம் கொளாநல்லி, கருவேலம்பாளையம், ஊஞ்சலூர், வெங்கம்பூர் மற்றும் கொடுமுடி உள்ளிட்ட பகுதிகளுக்கு பரிசல்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் இந்த தொழிலை நம்பி உள்ள கூலித்தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நாமக்கல் மாவட்ட காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்களை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க ஆற்றுக்குள் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே காவிரி ஆற்றில் தண்ணீர் இருகரைகளையும் தொட்டு செல்வதால் காவிரி ஆற்று பகுதி, காவிரி பாலத்திற்கு சென்று பொதுமக்கள் பார்ப்பதற்கும், செல்பி எடுப்பதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளதால் அங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பரமத்திவேலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜாரனவீரன் மற்றும் கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கர், பரமசிவம் ஆகியோர் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com