கிள்ளையில் விஷம் குடித்து மீனவர் தற்கொலை

கிள்ளையில் விஷம் குடித்து மீனவர் தற்கொலை செய்து கொண்டா.
கிள்ளையில் விஷம் குடித்து மீனவர் தற்கொலை
Published on

கிள்ளை பில்லுமேடு சுனாமிநகரை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 55). மீனவர். இவரது மனைவி லட்சுமி. இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் மணிவண்ணன் அவரை நினைத்து துக்கத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று துக்கம் தாங்காமல் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மணிவண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி அவரது தாய் தங்கவள்ளி கிள்ளை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com