மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை

கருங்கல் அருகே மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

கருங்கல்:

கருங்கல் அருகே உதய மார்த்தாண்டம் மிடாலம் பகுதியை சேர்ந்தவர் பங்கிராஸ் (வயது 57). மீனவரான இவர் கடலுக்கு சென்று மீன்பிடி தொழில் செய்து வந்தார்.

இந்தநிலையில் அவர் கடந்த ஒரு வருடமாக மீன்பிடி தொழிலுக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. சம்பவத்தன்று பங்கிராஸ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் கருங்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com