தூத்துக்குடியில் ரெயில் முன்பு பாய்ந்து மீனவர் தற்கொலை

தூத்துக்குடியைச் சேர்ந்த மீனவர் ஒருவர், கடந்த 4 ஆண்டுகளாக குடும்பத்தை பிரிந்து வசித்து வருகிறார். இதனால் அவர் மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.
தூத்துக்குடியில் ரெயில் முன்பு பாய்ந்து மீனவர் தற்கொலை
Published on

தூத்துக்குடி தாளமுத்துநகர், சிலுவைப்பட்டி கிழக்கு காமராஜர் நகரைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் ராஜாமணி (வயது 33), மீனவர். இவருக்கு திருமணமாகி மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக குடும்பத்தை பிரிந்து அவர் வசித்து வருகிறார். இதனால் அவர் மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவர் நேற்று இரவு சில்வர்புரத்தில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் தனது வீட்டுக்கு செல்வதாக கூறிச்சென்ற அவர் நேற்று இரவு தூத்துக்குடியில் இருந்து சென்னை நேக்கி செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து தற்கெலை செய்து கெண்டார். இதுகுறித்து தூத்துக்குடி இருப்பு பாதை காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மகாகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com