கருங்கல் அருகேமீனவர் தூக்குப்போட்டு தற்கொலை

கருங்கல் அருகே மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கருங்கல் அருகேமீனவர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on: 

கருங்கல்:

கருங்கல் அருகே உள்ள குறும்பனை இனிகோநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜேசுதாசன் (வயது 64), மீனவர். இவருக்கும் இவரது மருமகளுக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதுபற்றி மருமகள் குளச்சல் மகளிர் போலீசில் புகார் அளித்து, ஜேசுதாசன் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார். இதனால், மனமுடைந்த ஜேசுதாசன் சம்பவத்தன்று யாரும் வீட்டில் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கருங்கல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து ஜேசுதாசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

X

Daily Thanthi
www.dailythanthi.com