மீனவர் தூக்கு போட்டு தற்கொலை

மெஞ்ஞானபுரம் அருகே மீனவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மீனவர் தூக்கு போட்டு தற்கொலை
Published on

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் அருகே மீனவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மீனவர்

குலசேகரன்பட்டினம் அருகே உள்ள கல்லாமொழி பதுவை நகரை சேர்ந்தவர் அந்தோணி (வயது 36). மீனவர். மீன்பிடி தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மோட்சராணி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அந்தோணி தினமும் குடிபோதையில் வந்து அவரது மனைவியிடம் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.

கடந்த 17-ந் தேதி இரவு 8 மணிக்கு குடிபோதையில் வீட்டுக்கு வந்த அவர், வழக்கம்போல் மனைவியை அடித்து பிரச்சினை செய்துள்ளார். இதை அக்கம் பக்கத்தினர் கண்டித்ததாக கூறப்படுகிறது.

தூக்கில் தொங்கினார்

இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் அவர் மீன்பிடிக்க கடலுக்கு சென்றார். மீண்டும் மதியம் 1 மணிக்கு கடலில் இருந்து வீட்டுக்கு திரும்பி அந்தோணி மனவேதனையில் இருந்துள்ளார்.

சிறிது நேரத்தில் வீட்டில் இருந்த மின் விசிறியில் சேலையில் தூக்குப்போட்டு தொங்கியுள்ளார். இதை கவனித்த மனைவி அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டுள்ளார். பின்னர் அக்கம் பக்கத்தினர் துணையுடன் அவரை தூக்கில் இருந்து மீட்டு, திருச்செந்தூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் சர்த்துள்ளார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com