மீனவர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

குளச்சலில் மீனவர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
மீனவர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
Published on

குளச்சல், 

ராகுல் காந்தியை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து குமரி கிழக்கு மாவட்ட மீனவரணி சார்பில் குளச்சல் கடற்கரை சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட மீனவரணி தலைவர் ஸ்டார்வின் தலைமை தாங்கினார். குளச்சல் நகரத் தலைவர் சந்திரசேகர், மாவட்ட செயலாளர் தர்மராஜ், மீனவரணி மாவட்ட தலைவர் லாலின், செயலாளர் ஸ்வீட்டன், துணைத் தலைவர் பிரான்சிஸ், பொருளாளர் ராபின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகில இந்திய செயலாளர் ஜோர்தான், மாநில செயற்குழு உறுப்பினர் யூசப்கான், குருந்தன்கோடு ஒன்றிய துணைத் தலைவர் எனல்ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர். போராட்டத்தில் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் செயலாளர் லாரன்ஸ், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் வதனநிஷா, திங்கள்சந்தை பேரூராட்சி தலைவர் சுமன், மாநில அமைப்பு செயலாளர் விண்ணசு, மாநில பேச்சாளர் அந்தோணிமுத்து மற்றும் ராஜன், ஜெனித், அந்தரியாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com