பழவேற்காடு ஏரியில் மூழ்கி மீனவர் பலி

பழவேற்காடு ஏரியில் மீன் பிடித்தபோது சேற்றில் சிக்கி மீனவர் பரிதாபமாக இறந்தார்.
பழவேற்காடு ஏரியில் மூழ்கி மீனவர் பலி
Published on

மீனவர் பலி

மீஞ்சூர் அருகே உள்ள பழவேற்காடு அடுத்த சாத்தாங்குப்பம் மீனவ கிராமத்தில் பாரதியார் தெருவில் வசித்து வந்தவர் அசோகன் (வயது 46). இவர், மீன்பிடி தொழில் செய்து வந்தார்.

நேற்று அசோகன், பழவேற்காடு ஏரியில் மீன் பிடிப்பதற்காக சென்றார். ஏரியில் மீன்பிடித்து கொண்டு இருந்தபோது எதிர்பாராதவிதமாக சேற்றில் சிக்கிக்கொண்டார். அதில் இருந்து அவரால் மீண்டு வரமுடியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

போலீஸ் விசாரணை

ஏரியில் அசோகன் பிணமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த சக மீனவர்கள், இதுகுறித்து காட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மீனவர்கள் உதவியுடன் ஏரியில் மிதந்த அசோகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com