மீனவர் தற்கொலை

மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மீனவர் தற்கொலை
Published on

கூடங்குளம்:

கூடங்குளம் அருகே இடிந்தகரை பீட்டர் தெருவை சேர்ந்தவர் மேல்திஸ் (வயது 40). மீனவரான இவர் குடும்ப பிரச்சினை காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கூடங்குளம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து மேல்திஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com