மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
Published on

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை, ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம், வெள்ளபள்ளம், மணியன்தீவு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசியது. இதனால் நேற்று 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. ஒரு சில மீனவர்கள் கரையோரம் மீன்பிடிக்க சென்ற நிலையில் காற்று அதிகமாக வீசியதால் உடனடியாக கரை திரும்பினார். இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டன.

X

Daily Thanthi
www.dailythanthi.com