மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

வேதாரண்யத்தில் பலத்த காற்று:வீசியதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
Published on

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளபள்ளம், வானவன்மகாதேவி, மணியன்தீவு, சிறுத்தலைக்காடு ஆகிய கடற்கரை பகுதியிலும், கடலிலும் பலத்த காற்று வீசியது. இதனால் நேற்று 5 ஆயிரம் பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் கடற்கரையோரம் தங்களது பைபர் படகுகளை மீனவர்கள் பாதுகாப்பாக நிறுத்திவைத்திருந்தனர். இதன் காரணமாக கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் தங்கள் வலைகள் மற்றும் படகுகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com