குமரி மாவட்ட மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் 30-ந்தேதி நடக்கிறது

குமரி மாவட்ட மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் 30-ந்தேதி நடக்கிறது
குமரி மாவட்ட மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் 30-ந்தேதி நடக்கிறது
Published on

நாகர்கோவில்:

குமரி மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

குமரி மாவட்டத்தில் மாதம் தோறும் மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும். அந்த வகையில் இந்த மாதத்திற்கான மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 30-ந்தேதி காலை 10.30 மணிக்கு நாஞ்சில் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. எனவே, மீன்வளத்துறை மற்றும் இதர அரசுத்துறைகளால் நிறைவேற்றப்பட வேண்டிய மீனவர்களின் குறைகள், கோரிக்கைகள், தேவைகள் அடங்கிய மனுக்களை குறை தீர்க்கும் கூட்டத்தில் மீனவர்கள் நேரில் வழங்கலாம். பிற அரசுத்துறைகள் சார்ந்த கோரிக்கைகளை ஒரே மனுவில் கொடுக்காமல் துறை வாரியாக தனித்தனி மனுக்களாக வழங்கிட வேண்டும். கூட்டத்தில் பெறப்படும் மனுக்களை சம்பந்தப்பட்ட பிற அரசுத்துறை அலுவலர்களுக்கு அனுப்பி நடவடிக்கை மேற்கொண்டு அதன் விவரம் அடுத்த மாதம் நடைபெறும் மீனவர் குறை தீர்க்கும் கூட்டத்தில் தெரிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com