

சென்னை,
தென்கிழக்கு வங்கக்கடலில் வருகிற 13-ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது 14-ம் தேதி வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறும் என்றும், அதன் பின்னர் வரும் 13,14 தேதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும் என்றும் அது புயலாக மாறக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி அது புயலாக மாறக்கூடும் என்பதால் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற சென்னை காசிமேடு மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த பாதுகாப்பு விதிகளையும் எச்சரிக்கையையும் மீறி கடலில் தங்கியிருக்கும் படகுகள் மற்றும் மீனவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.