திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல தடை


திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல தடை
x

'பி.எஸ்.எல்.வி. - சி62’ ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படுகிறது.

சென்னை,

மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ.) சேவைக்காக இ.ஓ.எஸ். என்-1 என்ற செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோளை ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து 'பி.எஸ்.எல்.வி. - சி62 'என்ற ராக்கெட் மூலம் இன்று(திங்கள்கிழமை) இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது.

இதற்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று காலை 10.17 மணிக்கு தொடங்கியது. இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதையொட்டி ஸ்ரீஹரிகோட்டா அருகில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் இன்று கடலில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

1 More update

Next Story