வேதாரண்யத்தில் திடீரென கடல் நீர் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம்

கடல் நீர் உள்வாங்கியுள்ளதால் மீனவர்களும், பொதுமக்களும் அச்சம் அடைந்துள்ளனர்.
வேதாரண்யத்தில் திடீரென கடல் நீர் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம்
Published on

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் சன்னதி கடல், சுமார் 100 அடி தூரம் உள்வாங்கி காணப்படுகிறது. கடல் நீர் உள் வாங்கிய பகுதியில் சுமார் 100 அடி தூரம் சேரும், சகதியும் அதிகமாக காணப்படுகிறது.

கடலில் சுமார் மூன்று அடி முதல் நான்கு அடி ஆழம் வரை சேரும், சகதியாகவும் காணப்படுவதால் மீனவர்களும் பொதுமக்களும் கடலில் இறங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கடலில் அலைகள் இன்றி அமைதியாக காணப்படுகிறது.

கடல் நீர் உள்வாங்கியுள்ளதால் மீனவர்களும், பொதுமக்களும் அச்சம் அடைந்துள்ளனர். பருவநிலை மாற்றம் காரணமாக கடல் உள் வாங்கியதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com