சூரத்தூர்பட்டி கண்மாயில் மீன்பிடி திருவிழா

சூரத்தூர்பட்டி கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
சூரத்தூர்பட்டி கண்மாயில் மீன்பிடி திருவிழா
Published on

மேலூர்

மேலூர் பகுதியில் உள்ள கண்மாய்களில் வளரும் மீன்களை தண்ணீர் வற்றியவுடன் பொதுமக்கள் இலவசமாக பிடித்து செல்லும் மீன்பிடி விழாக்கள் பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது. தற்போது கோடை காலம் என்பதால் மேலூர் பகுதியில் அனைத்து கண்மாய்களிலும் தண்ணீர் வற்றி வருகிறது. இந்நிலையில் உரங்கான்பட்டி அருகே உள்ள சூரத்தூர்பட்டி கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. பாரம்பரிய வழக்கப்படி கிராம பெரியவர்கள் சாமி கும்பிட்டு வெள்ளை வீசிய பின் மீன்பிடி விழா தொடங்கியது. நத்தம், சிங்கம்புணரி, திருப்புவனம், மேலூர், உரங்கான்பட்டி, புலிமலைப்பட்டி சருகுவலையபட்டி, கீழவளவு, கீழையூர் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான மக்கள் கட்லா, விரால் உள்ளிட்ட மீன்களை பிடித்து மகிழ்ச்சியுடன் சென்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com