பொன்னமராவதி அருகே மீன்பிடி திருவிழா - 10 ஆயிரம் பேர் பங்கேற்பு...!

பொன்னமராவதி அருகே ஏனாதி பெரிய கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
பொன்னமராவதி அருகே மீன்பிடி திருவிழா - 10 ஆயிரம் பேர் பங்கேற்பு...!
Published on

பொன்னமராவதி,

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஏனாதி பெரிய கண்மாயில் மீன்பிடி திருவிழா இன்று நடைபெற்றது. மீன்பிடி திருவிழாவை முன்னிட்டு பொன்னமராவதியை சுற்றி உள்ள கிராமங்களான மேலைச்சிவபுரி, வேந்தன்பட்டி, அஞ்சுபுளிப்பட்டி, மைலாப்பூர், வலையப்பட்டி, தொட்டியம்பட்டி, கட்டையாண்டிபட்டி, கொப்பனாபட்டி, ஆலவயல், அம்மன்குறிச்சி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 10 ஆயிரம் பேர் மீன்பிடி திருவிழாவில் கலந்து கொண்டனர்.

இதில் ஊர் முக்கியஸ்தர்கள் ஊராட்சி மன்ற தலைவர் கரை மேல் உள்ள விநாயகர் கோவிலில் தேங்காய் உடைத்து தீபாரதனை காண்பிக்கப்பட்டு பின்பு வெள்ளை வீசினர்.

பின்பு பொதுமக்கள் பெரியகண்மாயில் இறங்கி மீன் பிடிக்க தொடங்கினர். இதில் பொதுமக்கள் ஊத்தா, தூரி, கச்சா, வலை உள்ளிட்டவைகளை பயன்படுத்தி கெண்டை, கெளுத்தி, அயிரை, விரால், சிலேப்பி, குரவை உள்ளிட்ட பலவகை மீன்கள் பிடித்தனர். அப்போது ஒரு சிலரின் வலையில் தண்ணீர் பாம்புகள் சிக்கி பொதுமக்களை அச்சுறுத்தியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com