ராணுவத்திற்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு 3-வது நாளாக உடற்தகுதி தேர்வு

ராணுவத்திற்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு 3-வது நாளாக உடற்தகுதி தேர்வு நடந்தது.
ராணுவத்திற்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு 3-வது நாளாக உடற்தகுதி தேர்வு
Published on

உடற்தகுதி தேர்வு

மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தின் மூலம் இந்திய ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாமிற்கு விண்ணப்பித்த பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய 16 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு ஏற்கனவே கணினி வாயிலாக எழுத்து தேர்வு நடந்தது.

முதற்கட்ட எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற 3 ஆயிரத்து 600 பேருக்கு உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் பெரம்பலூரில் மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் கடந்த 1-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

2,231 பேர் பங்கேற்பு

முதல் நாளில் 726 பேர் பங்கேற்றனர். 2-வது நாளில் 785 பேர் பங்கேற்றனர். 3-வது நாளான நேற்று தென்காசி, ராமநாதபுரம் ஆகிய 2 மாவட்டங்களை சேர்ந்த மொத்தம் 810 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவர்களில் 720 பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு உடற்தகுதியாக 1,600 மீட்டர் ஓட்டம் நடந்தது. ஓட்டத்தில் 265 பேர் தேர்ச்சி பெற்றனர். அதனை தொடர்ந்து அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடந்தது.

பின்னர் உயரம் அளத்தல், மார்பளவு அளத்தல், 9 அடிக்கு நீளம் தாண்டுதல், இசட் வடிவிலான கம்பியில் கைகளை விரித்தவாறு வேகமாக நடத்தல், புல்-அப்ஸ் எடுத்தல் உள்ளிட்ட உடற்தகுதி தேர்வும் நடந்தது. அதில் தேர்வானவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. 3 நாட்களில் மாத்தம் 2,231 பேர் பங்கேற்றுள்ளனர். இதைத்தொடர்ந்து 4-வது நாளாக இன்று (செவ்வாய்க்கிழமை) இளைஞர்களுக்கு உடற்தகுதி தேர்வு-சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடக்கிறது. நாளையுடன் (புதன்கிழமை) இந்த பணிகள் நிறைவடைகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com