ராணுவத்திற்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு 4-வது நாளாக உடற்தகுதி தேர்வு

ராணுவத்திற்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு 4-வது நாளாக உடற்தகுதி தேர்வு நடைபெற்றது.
ராணுவத்திற்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு 4-வது நாளாக உடற்தகுதி தேர்வு
Published on

மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தின் மூலம் இந்திய ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாமிற்கு விண்ணப்பித்த பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய 16 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு ஏற்கனவே கணினி வாயிலாக எழுத்து தேர்வு நடந்தது.

முதற்கட்ட எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற 3 ஆயிரத்து 600 பேருக்கு உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரி பார்ப்பு பணிகள் பெரம்பலூரில் மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் கடந்த 1-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று 4-வது நாளாக இளைஞர்களுக்கு உடற்தகுதி தேர்வு-சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடந்தது. இன்றுடன் (புதன்கிழமை) இந்த பணிகள் நிறைவடைகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com