நெல்லையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட திட்டமிட்ட 5 பேர் கைது - போலீசார் அதிரடி

அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது.
நெல்லையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட திட்டமிட்ட 5 பேர் கைது - போலீசார் அதிரடி
Published on

நெல்லை,

நெல்லை மாவட்டம், திருக்குறுங்குடி காவல் ஆய்வாளர் கபீர் தாசன், உதவி ஆய்வாளர்கள் சுப்பிரமணியன் சேகர் மணி மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கிடமாக வந்த 5 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் அருண்பாண்டி (25), நாராயணன் (27), வள்ளிமுத்து என்ற பாண்டி (25), முத்துப்பாண்டி (23), மற்றும் குமரேசன் என்ற கொம்பையா (29) என தெரிய வந்தது. அவர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடத் திட்டமிட்டது தெரிய வரவே அவர்களிடம் சோதனை நடத்தப்பட்டது.

ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள்

இதில் அவர்களிடமிருந்து பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படும் வெடி மருந்து பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்களிடமிருந்து இரண்டு இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

தந்தை மகன் வெட்டி கொலை

நெல்லை மாவட்டத்தில் நேற்று வீரவநல்லூரில் தந்தை மகன் வெட்டி கொலை செய்த சம்பவம் நடந்த நிலையில் திருக்குறுங்குடி போலீசார் நடத்திய சோதனையில் வெடி பொருள்களும் பயங்கர ஆயுதங்களும் சிக்கியது பரபரப்பை அதிகப்படுத்தி இருக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com