

புதுக்கோட்டை:
5 பேர் கைது
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குன்னவயல் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
அங்கு கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த குன்னவயலை சேர்ந்த மதி (வயது 33), இலுப்பூரை சேர்ந்த பிரான்சிஸ் (26), திண்டுக்கல்லை சேர்ந்த ஜோஸ்வா (20), திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த அன்புசெழியன் (19), தூத்துக்குடியை சேர்ந்த போஸ் (22) ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கல்லூரி மாணவர்கள்
கைதானவர்கள் பற்றி போலீசார் கூறுகையில், தேனி மாவட்டத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஜோஸ்வா, அன்புசெழியன் ஆகியோர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகின்றனர். தற்போது போஸ் திருச்சியில் வசித்து வருகிறார். இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு கஞ்சாவை வாங்கி விற்று வந்ததோடு, தாங்களும் கஞ்சாவை பயன்படுத்தி உள்ளனர் என்றனர்.