பிரமோற்சவ விழா கொடியேற்றம்

வடக்கு விஜயநாராயணம் அழகியமன்னார் ராஜகோபாலசாமி கோவில் பிரமோற்சவ விழா கொடியேற்றம் நடைபெற்றது
பிரமோற்சவ விழா கொடியேற்றம்
Published on

இட்டமொழி:

நெல்லை மாவட்டம் வடக்கு விஜயநாராயணத்தில் பிரசித்தி பெற்ற அழகிய மன்னார் ராஜகோபாலசாமி கோவில் உள்ளது. இதில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி பிரமோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பிரமோற்சவ விழா நேற்று காலை 10.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் சேரன்மாதேவி உதவி கலெக்டர் ரிஷப், திசையன்விளை தாசில்தார் செல்வகுமார், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி தினமும் இரவு அன்ன வாகனம், சிம்ம வாகனம், ஆஞ்சநேயர் வாகனம், ஆதிசேஷ வாகனம், கருடாழ்வார் வாகனம், யானை வாகனம், புன்னை மர வாகனம், வெள்ளிக்குதிரை வாகனம், பல்லக்கு வாகனம், தோளுக்கினியான் வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது. வருகிற 12-ந் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை விழா கமிட்டியார், ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com