காட்டாற்று வெள்ளம் வடிந்தது: திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் தரிசனம்

மதிய நிலவரப்படி வெள்ளம் முழுமையாக வடிந்ததால், பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி பக்தர்கள் மீண்டும் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
காட்டாற்று வெள்ளம் வடிந்தது: திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் தரிசனம்.
கோவிலுக்குள் வெள்ளம்
Published on: 

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவிலை சூழ்ந்திருந்த காட்டாற்று வெள்ளம் வடிந்ததைத் தொடர்ந்து, இன்று காலை முதல் பக்தர்கள் மீண்டும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

மலைப்பகுதியில் கனமழை

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான குருமலை, குழிப்பட்டி பகுதிகளில் நேற்று (வியாழக்கிழமை) இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் திடீரென கடும் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.

கோவிலை சூழ்ந்த வெள்ளம்

அருவியில் இருந்து கொப்பளித்து வந்த வெள்ள நீர், மலை அடிவாரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தை முழுமையாக சூழ்ந்தது. இரவு நேரம் என்பதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பாதுகாப்பு கருதி, இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை முதலே கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் தற்காலிகமாக தடை விதித்திருந்தனர்.

வடிந்த நீர் - அடியோடு நீங்கிய தடை

இந்நிலையில், இன்று காலை மழையின் வேகம் குறைந்ததைத் தொடர்ந்து, கோவில் வளாகத்தில் சூழ்ந்திருந்த வெள்ள நீர் படிப்படியாக வடியத் தொடங்கியது. மதிய நிலவரப்படி வெள்ளம் முழுமையாக வடிந்ததால், பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி பக்தர்கள் மீண்டும

அருவியில் குளிக்கத் தடை

இருப்பினும், பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து இன்னும் குறையாததால், அருவியில் இறங்கவும், குளிக்கவும் விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்து நீடித்து வருகிறது. பாதுகாப்புப் பணியில் போலீசாரும் கோவில் பணியாளர்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com