சென்னை மெரினாவில் விமான சாகசம் - பொதுமக்கள் நேரில் கண்டு ரசிக்க ஏற்பாடு

விமான சாகசத்தை பொதுமக்கள் நேரில் கண்டு ரசிக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
சென்னை மெரினாவில் விமான சாகசம் - பொதுமக்கள் நேரில் கண்டு ரசிக்க ஏற்பாடு
Published on

சென்னை,

சென்னை மெரினா கடற்கரையில் முதல்முறையாக 'ஏர் ஷோ 2024' என்ற பெயரில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்திய விமானப்படையின் நிறுவன தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக அடுத்த மாதம் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

இந்த விமான சாகசத்தில் ரபேல், சூகோய், தேஜஸ் உள்ளிட்ட இந்திய விமானப்படையின் முன்னணி போர் விமானங்கள் பங்கேற்கின்றன. மேலும், ஆகாஷ்கங்கா ஸ்கைடைவிங் காட்சி குழுவும் வான்வழி சாகசங்களை நிகழ்த்த உள்ளனர். இந்த விமான சாகசத்தை பொதுமக்கள் நேரில் கண்டு ரசிக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com