சென்னையில் திடீர் மழையால் விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு பாதிப்பு

சென்னையில் இருந்து மும்பை, டெல்லி, மைசூரு, ராஞ்சி செல்லும் விமானங்கள் தாமதம் ஆகி உள்ளன. இதனால், பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்
சென்னையில் திடீர் மழையால் விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு பாதிப்பு
Published on

மழை காரணமாக சென்னையில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் புறப்படும் மற்றும் சென்னைக்கு வரும் விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தரையிறங்க வேண்டிய 10க்கும் மேற்பட்ட விமானங்கள் வானில் வட்டமடித்து வருகின்றன. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 10 விமானங்களின் சேவையும் தாமதம் ஏற்பட்டுள்ளது.சென்னையில் இருந்து மும்பை, டெல்லி, மைசூரு, ராஞ்சி செல்லும் விமானங்கள் தாமதம் ஆகி உள்ளன. இதனால், பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

முன்னதாக இன்று மாலை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த காற்றுடன் மழை பெய்தது. மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கியதால், வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com