

சென்னை,
முதல்-அமைச்சர் விஜய் அரசுமுறை பயணமாக 2 நாள் டெல்லி சென்று வந்தார். அவர் நேற்றுமுன் தினம் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். தொடர்ந்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை விஜய் சந்திப்பதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அந்த சந்திப்பு நடைபெறவில்லை. அதையடுத்து விஜய் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார்.
பின்னர்நேற்று சென்னை திரும்பினார். இந்தநிலையில் முதல்-அமைச்சர் விஜய் டெல்லியில் இருந்து மீண்டும் சென்னை திரும்பும்போது அவருடன் விமானப்பணிப்பெண் ஒருவர் எடுத்துகொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உமா மீனாட்சி என்ற அந்த விமானப்பணிப்பெண், நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய விஜயை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததால் இந்த விமான பயணம் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று குறிப்பிட்டு அந்த படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த புகைப்படத்தில் விஜய்யின் தற்போது தனது அடையாளமாக மாறியுள்ள கருப்பு - வெள்ளை கோட் உடையில் முதல்-அமைச்சர் விஜய் மிகவும் இயல்பாகவே காணப்படுகிறார். இந்த படம் ரசிகர் பக்கங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் வேகமாக பரவியது.