அசானி புயல்: சென்னையில் விமான சேவை பாதிப்பு

சென்னையில் இருந்து விசாகப்பட்டினம், ஹைதராபாத், மும்பை, ஜெய்ப்பூ செல்லும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அசானி புயல்: சென்னையில் விமான சேவை பாதிப்பு
Published on

சென்னை,

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த வார இறுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. அது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக மாறியது. நேற்று முன்தினம் காலை அந்த குறைந்த காற்றழுத்தம் புயலாக மாறியது.

அசானி புயல் காரணமாக தமிழ்நாட்டில் 33 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுவை காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அசானி புயல் காரணமாக சென்னையில் இருந்து விசாகப்பட்டினம், ஐதராபாத், மும்பை, ஜெய்பூர் செல்லும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com