திருச்சியில் இருந்து துபாய்க்கு மீண்டும் விமான சேவை

போர்ப்பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகளுக்கு இயக்கப்பட்டு வந்த விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
திருச்சியில் இருந்து துபாய்க்கு மீண்டும் விமான சேவை
Published on

திருச்சி,

திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுக ளுக்கு அதிக அளவிலான விமான சேவைகள் இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி28-ந்தேதி முதல் வளைகுடா நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்ப்பதற்றம் காரணமாக இயக்கப்பட்டு வந்த விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

இதனால் தென் தமிழகத்தில் இருந்த பயணிகள் பெரும் அவதியை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் 3 இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் திருச்சியில் இருந்து துபாய்க்கு ஏர் இந் தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தனது சேவையை தொடங்க உள்ளது. இந்த விமான சேவையானது வருகிற 30-ந் தேதி வரை தொடரும் என விமான நிலைய இயக்குனர் ராஜு தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com