சென்னையில் இருந்து கொல்கத்தாவுக்கு 31-ந் தேதி வரை விமான சேவை ரத்து

சென்னையில் இருந்து கொல்கத்தாவுக்கு 31-ந் தேதி வரை விமான சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் இருந்து கொல்கத்தாவுக்கு 31-ந் தேதி வரை விமான சேவை ரத்து
Published on

சென்னை,

இந்தியா முழுவதும் கொரோனா ஊரடங்கில் மத்திய அரசு சில தளர்வுகளை அறிவித்ததால் கடந்த மே மாதம் 25-ந் தேதி முதல் சென்னையில் உள்நாட்டு விமான சேவை தொடங்கியது. ஆனால் மும்பை போன்ற சில இடங்களுக்கு சென்னையில் இருந்து இன்னும் விமான சேவை தொடங்கப்படவில்லை.

இந்த நிலையில் கொரோனா தொற்று அதிகமாக உள்ள சென்னை, டெல்லி, மும்பை, நாக்பூர், ஆமதாபாத் ஆகிய நகரங்களில் இருந்து விமானங்கள் வர கடந்த 6-ந் தேதியில் இருந்து 19-ந் தேதி வரை மேற்கு வங்காள மாநில அரசு தடை விதித்து இருந்தது. இதனால் சென்னை-கொல்கத்தா இடையே தினமும் சென்று வரவேண்டிய 10 விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.

தற்போது மேற்கு வங்காள மாநில அரசு இந்த தடையை வருகிற 31-ந் தேதி வரை நீடித்து உள்ளது. இதனால் சென்னையில் இருந்து கொல்கத்தாவுக்கு வருகிற 31-ந் தேதி வரை விமானங்கள் இயக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை-கொல்கத்தா இடையே 10 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதால் 31-ந் தேதி வரை கொல்கத்தா செல்ல விமான டிக்கெட் எடுத்த பயணிகள், அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் அந்த விமான டிக்கெட்டை பயன்படுத்தி கொள்ளலாம் என விமான நிறுவனங்கள் அறிவித்து உள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com