சென்னையில் பனிமூட்டத்தால் விமான சேவை பாதிப்பு

சென்னையில் பனிமூட்டத்தால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பனிமூட்டத்தால் விமான சேவை பாதிப்பு
Published on

சென்னை,

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது. இன்று காலையில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய பகுதியில் கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது. ஓடுபாதையே தெரியாத அளவுக்கு பனிமூட்டமாக இருந்தது.

இதனால் மும்பையில் இருந்து சென்னை வந்த விமானம் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டது. கோலாலம்பூரில் இருந்து சென்னை வர வேண்டிய விமானமும் ஒரு மணி நேரம் தாமதமாகியுள்ளது. மேலும் கொழும்பு, டெல்லி, துபாய் செல்லும் விமானங்களும் 20 நிமிடங்கள் தாமதமாகவே புறப்பட்டன.

சென்னையில் நிலவிவரும் கடும் பனிப்பொழிவால் செங்கல்பட்டு - கடற்கரை வரை செல்லும் அனைத்து புறநகர் ரெயில்களும், தென் மாவட்டங்களில் இருந்து வரும் விரைவு ரெயில்களும் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. பனி அதிகமாக இருக்கும் பகுதிகளில் குறைந்த வேகத்தில் ரெயிலை இயக்குமாறு ரெயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தின் மதுராந்தகம், மேல்மருவத்தூர், அச்சரப்பாக்கம், சோத்துப்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலையில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனி மூடியுள்ளதால் முகப்பு விளக்கை எரியவிட்டபடி வாகன ஓட்டிகள் செல்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com