திருமண ஆசை காட்டி பெண்ணுடன் உல்லாசம்.. குழந்தை பிறந்ததும் வாலிபர் செய்த காரியம்

திருமண ஆசை ஏற்படுத்தி அந்த பெண்ணுடன் வாலிபர் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா கயலூர் கிராமத்தைச் சேர்ந்த சூரியமூர்த்தி மகன் திருநாவுக்கரசு (வயது 30). இவர் சென்னையில் உள்ள பிரபல துணிக்கடை ஒன்றில்2015-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார். இதே துணிக்கடையில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியை சேர்ந்த 26 வயது பெண் வேலைபார்த்தார். அப்போது வந்தவாசி பெண்ணும் திருநாவுக்கரசும் காதலித்து வந்தனர்.
திருமண ஆசை ஏற்படுத்தி அந்த பெண்ணுடன் திருநாவுக்கரசு உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. கொரோனா காலத்தில் விடுமுறை அளிக்கப்பட்டதால் இருவரும் சொந்த ஊருக்கு திரும்பினர். இந்த நிலையில் கர்ப்பிணியான அந்த பெண்ணுக்கு 2021-ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததும் பார்க்க வந்த திருநாவுக்கரசுவிடம் திருமணம் செய்யக்கோரி வலியுறுத்தி உள்ளார்.
திருமணம் செய்து கொள்வதாக ஒப்புக்கொண்டு சென்ற திருநாவுக்கரசு அதன் பிறகு அவர் சந்திக்க வராமல் இருந்துள்ளார். செல்போன் மூலமாகவும் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து வந்தவாசி மகளிர் போலீசில் நடந்த சம்பவம் குறித்து அவர் புகார் செய்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மகளிர் போலீஸ் இன்ஸ் பெக்டர் மங்கையர்க்கரசி தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் சாந்தி, குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் ஏட்டு அன்பழகன் ஆகியோர் தஞ்சாவூர் மாவட்டம் சென்று நேற்று முன்தினம் திருநாவுக்கரசை கைது செய்தனர்.






