தெப்ப வெள்ளோட்டம்

தெப்ப வெள்ளோட்டம்
தெப்ப வெள்ளோட்டம்
Published on

திருப்பத்தூர்

திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவிலில் வருடந்தோறும் வைகாசி விசாகப் பெருவிழா 10 நாட்கள் நடைபெறும். இத்திருவிழாவில் 10-ம் மண்டகப்படியாக தெப்ப உற்சவம் நடைபெறும். இத்தெப்ப உற்சவத்திற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.25 லட்சம் மதிப்பில் மரத்திலான புதிய தெப்பத்தினை வடிவமைத்திருந்தனர். குளத்தில் நீர் பெருகாததாலும் கொரோனா ஊரடங்கினாலும் தெப்ப உற்சவம் நடைபெறவில்லை. இந்நிலையில் திருத்தளிநாதர் கோவில் வைகாசித் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 12-ந்தேதி 10-ம் திருவிழாவாக தெப்பத் திருவிழா நடைபெற உள்ள நிலையில் கடந்த 10 நாட்களாக தெப்பம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. அதன் வெள்ளோட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டு கோவில் ஆதீன கர்த்தா குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கோவிலுக்கு வருகை புரிந்தார். பின்னர் தெப்பத்தில் கலச பூஜை நடைபெற்று தீபம் காட்டப்பட்டது. இதைதொடர்ந்து தெப்ப வெள்ளோட்டத்தை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தொடங்கி வைத்தார். தெப்பம் ஒரு முறை சீதளிகுளத்தை வலம் வந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com