பாம்பன் தூக்கு பாலத்தை கடந்து செல்ல 4 நாட்களாக காத்திருக்கும் மிதவை கப்பல்...!

பாம்பன் தூக்கு பாலத்தை கடந்து செல்வதற்காக மிதவை கப்பல் ஒன்று 4 நாட்களாக பாம்பன் கடல் பகுதியில் காத்திருக்கிறது.
பாம்பன் தூக்கு பாலத்தை கடந்து செல்ல 4 நாட்களாக காத்திருக்கும் மிதவை கப்பல்...!
Published on

பாம்பன்,

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையை தொடர்ந்து பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 3-வது நாளாக இன்று 1-வது எண்புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது.

இதனால் ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி, தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் 2-வது நாளாக விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பாம்பன் தூக்கு பாலத்தை கடந்து செல்வதற்காக மகாராஷ்டிரா மாநிலம் பெலத்தூர் துறைமுகத்தில் இருந்து ஆந்திரமாநிலம் விசாகப்பட்டினம் செல்வதற்காக வந்த மிதவை கப்பல் ஒன்று பாம்பன் குருசடைதீவுஅருகே உள்ள கடல் பகுதியில் கடந்த 4 நாட்களாக பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

புயல் சின்னம் ஓய்ந்த பிறகு இந்த வாரத்தில் இந்த மிதவை கப்பலானது துறைமுக அதிகாரிகள் அனுமதியுடன் பாம்பன் தூக்குப்பாலம் வழியாக கடந்து செல்லலாம் என்று கூறப்படுகின்றது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com