

திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள வெள்ளிவாயல் கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் புகுந்தது. மேலும் வயல் வெளிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் பொன்னி, சீரக சம்பா உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கின. இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பால்வளத்துறை அமைச்சர் நாசர் நேரில் பார்வையிட்டார்.
தண்ணீர் தேங்கியுள்ளதால் கிராமத்திற்குள் கார் செல்ல முடியாததால், அமைச்சர் நாசர் தன்னுடன் வந்த அதிகாரிகள் மற்றும் கிராம மக்களுடன் டிராக்டரில் ஏறி கிராமத்திற்குள் சென்றார். இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்த அவர், கொசஸ்தலை ஆற்றங்கரை விரைவில் சீரமைக்கப்படும் என உறுதியளித்தார்.