

சென்னை,
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வரும் நிலையில், அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பிறப்பித்துள்ள உத்தரவில், அனைத்து 108 ஆம்புலன்சுகளும் அருகில் இருக்கும் காவல்நிலையங்களுடன் தொடர்பில் இருந்து, வெள்ள பாதிப்பு இடங்களில் மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோருக்கு உடனடியாக சிகிச்சை அளித்திட தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
மாவட்ட, தாலுகா மருத்துவமனைகள், கிராமப்புற, நகர்ப்புற சுகாதார நிலையங்கள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தேவையான அளவு மருந்து இருப்பு உள்ளதா என்பதையும், மின்சாரம் மற்றும் ஜனரேட்டர் வசதிகள் உள்ளதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார். மேலும் அவசரகால சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் தயார் நிலையில் இருக்குமாறும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.