வெள்ள தடுப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - அமைச்சர் துரைமுருகன் உத்தரவு

வடகிழக்கு பருவமழைக்கு முன்பு வெள்ள தடுப்பு பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

நீர்வளத்துறை அமைச்சர் தலைமையில் இன்று சென்னை தலைமை செயலகத்தில், சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட 13 மாவட்டத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து, சென்னை மண்டல பொறியாளர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆய்வுக்கூட்டத்தில், ரூ.700 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் வெள்ள தடுப்பு திட்டங்கள் மற்றும் ரூ.35 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் வடகிழக்கு பருவமழைக்கு முந்தைய தூர்வாரும் பணிகள் மற்றும் RRR திட்டத்தின் கீழ் (செப்பனிடுதல், புதுப்பித்தல், புனரமைத்தல்) ரூ.100 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் ஏரிகள் புனரமைப்பு பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் வெள்ள தடுப்பு பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகள் அனைத்தும் வடகிழக்கு பருமழைக்கு முன்பு விரைந்து முடிக்க நீர்வளத்துறை அமைச்சரால் உத்தரவிடப்பட்டது. இந்த கூட்டத்தில், கூடுதல் தலைமைச் செயலாளர் க.மணிவாசன், கூடுதல் செயலாளர் எஸ்.மலர்விழி, மன்மதன், முதன்மை தலைமைப் பொறியாளர் (முழு கூடுதல் பொறுப்பு) மற்றும் தலைமைப் பொறியாளர் (பொது). கண்காணிப்பு பொறியாளர்கள், மற்றும் அனைத்து நீர்வளத்துறை செயற்பொறியாளர்களும் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com