ஜவ்வாதுமலை பீமன் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் செல்ல தடை

பீமன் நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல மாவட்ட கலெக்டர் வந்தனா கார்க் தடை விதித்து உள்ளார்.
பீமன் நீர்வீழ்ச்சி
Published on: 

திருவண்ணாமலை,

ஜவ்வாதுமலை பீமன் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் செல்ல கலெக்டர் வந்தனா கார்க் தடை விதித்து உள்ளார்.

பீமன் நீர்வீழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் ஜவ்வாதுமலை உள் ளது. இங்கு பீமன் நீர்வீழ்ச்சி, சுற்றுச்சூழல் பூங்கா, கோலப்பன் ஏரி போன்றவை உள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜவ்வாதுமலையில் உள்ள ஜமுனாமரத்தூரில் 25 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இந்த மழை காரணமாக ஜவ்வாதுமலையில் உள்ள பீமன் நீர்வீழ்ச்சியில் வெள்ளம் ஏற்பட்டு மழை நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

வழக்கமாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும். விடுமுறை நாட்களிலும் ஜவ்வாதுமலைக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவார்கள். பீமன் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டும் சமயத்தில் அவர்கள் அதில் குளித்து மகிழ்வார்கள்.

சுற்றுலா பயணிகளுக்கு தடை

இந்த நிலையில் பீமன் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மழை நீர் அதிகளவில் ஆர்ப்பரித்து கொட்டுவதால் பீமன் நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல மாவட்ட கலெக்டர் வந்தனா கார்க் தடை விதித்து உள்ளார்.

மாவட்டத்தில் நிலவி வரும் தொடர் மழை மற்றும் கன மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு, பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்படும் அறிவிப்புகளை தவறாமல் பின்பற்றி தங்களது பாதுகாப்பை உறுதி செய்வதுடன், மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு அவர் கேட்டுக்கொண்டு உள்ளார்.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com