குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான எச்ச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை
Published on: 

சென்னை,

நீண்ட நேரம் பெய்த கனமழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு பாதை

சுமார் 1.5 கிமீ உயரம் வரை தெற்கு கடலோர தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது என்றும், சுமார் 1.5 கிமீ உயரம் வரை தெற்கு கடலோர தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து ஒடிசா கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை, மத்தியமேற்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.

கனமழை

இதன் காரணமாக இன்று (15-10-2026): நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், தென்காசி, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, கரூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, திருநெல்வேலி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தகவல் தெரிவித்திருந்தது.

குற்றாலம் அருவிகள்

இந்நிலையில் தென்காசியில் வடகிழக்கு பருவமழையின் முதல் நாளே நீண்ட நேரம் பெய்த கனமழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தற்போது குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com