குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
Published on

குற்றாலத்தில் தற்போது சீசன் மிகவும் நன்றாக உள்ளது. சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. குளிர்ந்த காற்று வீசுகிறது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. நேற்று முன்தினம் இரவு தென்காசி, குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் கனமழை கொட்டியது. இதனால் குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக பாதுகாப்பு கருதி அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

நேற்று காலை 11 மணி அளவில் ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு சற்று குறைந்தது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அருவிகளில் ஆர்ப்பரிக்கும் தண்ணீரில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். மெயின் அருவியில் சிறிது நேரம் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆனால் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால், போலீசார் அங்கு குளித்துக் கொண்டிருந்தவர்களை வெளியேற்றினர். தொடர்ந்து அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com